Showing posts with label Solar energy. Show all posts
Showing posts with label Solar energy. Show all posts

Sunday, May 27, 2012

மின்சாரம்: வழிகாட்டுகிறது ஜெர்மன் 27

Pபெர்லின்: 20 அணுமின்நிலைங்களில் உற்பத்தி செய்யும் அளவுக்கு சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜெர்மன் உலக சாதனை படைத்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஜெர்மன் தனது அணுமின் திட்டத்தை கைவிட்டு, தனது மின்தேவைக்காக புதுப்பிக்கவல்ல எரிசக்திக்கு மாறியுள்ளது.

இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜெர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின்தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது

.இந்தாண்டு ஜெர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது. இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இது 20 அணுமின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்உற்பத்திக்கு சமம் என கணக்கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்)

இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ஜெர்மன் சாதனை படைத்துள்ளது.