Sunday, June 24, 2012

-கவியரசு கண்ணதாசன்

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) 4000மேற்பட்ட கவிதைகள், 5000மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.
இயற்பெயர் முத்தையா.பிறந்த ஊர் முந்தைய இராமநாதபுரம் மாவட்டமும் இப்போதைய சிவகங்கை மாவட்டமுமாகிய காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டி
சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர் -

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்

அழும்போதுதனிமையில் அழு;சிரிக்கும்போதுநண்பர்களோடு சிரி. கூட்டத்தில்அழுதால் நடிப்புஎன்பார்கள்; தனிமையில்சிரித்தால்பைத்தியம் என்பார்கள்

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.

"யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.


மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல் சினிமாவில் இவர் எழுதிய கடைசிப்பாடலாகும்

" மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!!

'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

"உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும் "

"இன்னதுதான் இப்படித்தான்
என்பதெல்லாம் பொய்க்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா
எப்போதும் உன்வழக்கு "

"எல்லாம் அவன்செயலே
என்பதற்கு என்ன பொருள்
உன்னால் முடிந்ததெல்லாம்
ஓரளவே என்று பொருள்"

No comments:

Post a Comment